பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது,

தமிழகம் முழுவதிலும் உள்ள தொடக்க பள்ளி முதல் உயர்நிலை பள்ளி வரை காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் காமராஜரின் 123 வது பிறந்த நாள் விழா பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக விழாவை கவுரி தேவேந்திரன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
இதில், ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியின் செயலர் ரவிக்குமார்,நிர்வாகி உதயேந்திரன்,முதல்வர் சரண்யா,வித்யாஸ்ரம் பள்ளி நிர்வாக இயக்குனர் சவுந்தர்யா,உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில்,காமராஜர் வேடமிட்ட மாணவ,மாணவிகள்,
காமராஜரின் இலவச கட்டாயக் கல்வி, பள்ளிகள் சீரமைப்பு, தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, மின்சார உற்பத்தி,போன்ற தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற காமராஜரின் முக்கிய திட்டங்களை பதாகைகளாக கையில் ஏந்தியபடி தமிழ்நாடு வரைபடமாக தத்ரூபமாக அணிவகுத்து நின்றனர்.

பின்னர் பள்ளியில் காமராஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சிறப்புகள் குறித்து மாணவி பிரகதி உதயேந்திரன் மேடையில் பேசினார்.
இதே போல காமராஜரின் சிறப்புகளை கூறும் விதமாக பட்டிமன்றம்,வில்லுப்பாட்டு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.