• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சின்னத்திரை நிகழ்ச்சியில் மீண்டும் கலக்க வரும் கல்யாணி பூர்ணிதா

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் கல்யாணி பூர்ணிதா. இதுதான் அவரது உண்மையான பெயர். ஜெயம் படத்தில் சதாவின் தங்கையாக கல்யாணி கதாபாத்திரத்தில் நடித்த பின் பேபி கல்யாணி என்று அழைக்கப்பட்டு, பின்பு அது அவரது திரைப்பெயர் ஆனது. கல்யாணி வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடிகையாக வலம் வந்தார்.

கல்யாணிக்கு 4 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் திரையில் தோன்றாமல் ஒதுங்கி இருந்த கல்யாணி, வாய்ப்புக்காகதன்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றும் குண்டை தூக்கிப்போட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார்.இந்நிலையில் அவர் தற்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோ ஒன்றில் கம்பேக் கொடுத்துள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் கல்யாணி குழந்தைகள் குழுவின் வழிகாட்டியாக உள்ளார். இவருடன் கலக்கப்போவது யாரு அமுதவாணனும் களமிறங்குகிறார். இதன் காரணமாக கல்யாணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சக சின்னத்திரை பிரபலங்கள் அவரது கம் பேக்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.