• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கள்ளழகர் ஊர்வலம்… மண்டகப்படி மேற்கூரை விழுந்து விபத்து!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு 5 நாள் பயணமாக ஏப்ரல் 14 ஆம் தேதி மதுரை வந்திருந்த கள்ளழகர் ஊர்வலம், திருவிழா நிறைவுற்று நேற்று (ஏப்.19) இரவு 8 மணி அளவில் மதுரை மூன்றுமாவடி கடந்து அழகர் கோவில் நோக்கி சென்று கொண்டிருந்து.

அப்போது, சூர்யா நகர் அருகே இருந்த பெரியசாமி மண்டகப்படியில் எழுந்தருளும் வைபவத்திற்காக நின்ற போது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மேற்கூரையின் முன்பகுதி இடிந்து அதிலிருந்த ஓடுகள் சில கீழே விழுந்தன.
இந்த விபத்தில் அழகரின் வாகனத்துடன் வந்த சீர்பாதம் தாங்கும் நபர்கள் சுமார் 6 பேர் மற்றும் 4 காவலர்கள் என மொத்தம் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
உடனடியாக அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.