குடியரசுத்தலைவரின் பதவி காலம் நிறைவடைய உள்ளது.இதையடுத்து யார் அடுத்த குடியரசுத்தலைவர் வேட்பாளர் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பட்டியலில் தமிழிசை செளந்தரராஜன் பெயர் தான் முதன் முதலில் அடிபட்டது.ஆனால் அதற்குள் அவருக்கு இரண்டு மாநில ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளூர் குழாயடி சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு நடுவே தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு ஆளுநர் உருவாகிறார் என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.
தெலங்கானாவில் நடக்கும் பிரச்சனையை தனி ஒருவராக தமிழிசையால் கையாள முடியவில்லை. அதனால் அவரை புதுச்சேரியை மட்டும் கவனிக்க சொல்லிவிட்டு தெலங்கானா மாநிலத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணனை ஆளுநராக நியமிக்க லாம் என்ற பேச்சு அடிபட்டதாம். ஆனால் அந்த வாய்ப்பை பொன்னார் மறுத்துள்ளதாகவும் , பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பலமுறை வற்புறுத்தியும் இதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த வாய்ப்பு தற்போது அத்தி பூத்தது போல முன்னாள் பாஜக
தேசிய செயலர் ஹெச்.ராஜாவிற்கு அடித்துள்ளது. இவர் தான் தற்போது ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த முறை பாஜகவின் பிளான் வேறு குடியரசுத்தலைவர் வேட்பாளர் எப்படி இருக்கவேண்டும் என்ற திட்டம் ஏற்கனவே பாஜகவிடம் உண்டு. அந்த வகையில் தாங்கள் முஸ்லிம்களுக்கு , தலித் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை அடிக்கடி மக்களிடம் உணர்த்த முயற்சி செய்தது. குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்தை நியமனம் செய்தது. மத்தியஅமைச்சரவையில் எல்.முருகனை அமைச்சராக்கியது என பல விஷயங்களை முன் வைக்கிறது. அது போல தான் இந்த முறை முஸ்லிம் வேட்பாளரை நிறுத்த பாஜக முன் வந்துள்ளது. முஸ்லிம் வேட்பாளரை முன்மொழிந்தால் எதிர்கட்சிகள் எப்படி எதிர்க்கும் , அப்படி எதிர்த்தால் அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் என்று ஒரு அரசியல் செய்யவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை அடுத்த குடியரசுத்தலைவராக நியமிக்க பாஜக ஒரு திட்டம் வைத்துள்ளது.பாஜகவால் நியமிக்கப்பட்டவர்.சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்று வந்துள்ளார். இது போன்ற ஆட்களை தான் பாஜக விரும்புகிறது. இந்நிலையில் ஆரிப் முகமது கானின் ஆளுநர் இடம் காலியாகும் பட்சத்தில் அந்த இடத்திற்கு தான் தமிழகத்தில் இருந்து பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜாவை நியமனம் செய்ய திட்டமிடபட்டுள்ளதாக தகவல்.