ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு கலசலிங்கம் பார்மசி கல்லூரி 28வது பட்டமளிப்பு விழா தலைவர் முனைவர் கே ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. தாளாளர் டாக்டர்
எஸ்.அறிவழகி, ஸ்ரீதரன், செயலாளர் முனைவர் எஸ்.சசிஆனந்த், இயக்குநர் எஸ்.அர்ஜுன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் என்.வெங்கடேசன் வரவேற்றார்.
தலைமை விருந்தினர் மாவட்ட முதன்மை நீதிபதி மாண்புமிகு கே.ஜெயகுமார் ,
பி.பார்ம், எம்.பார்ம், பார்ம் டி , மாணவர்கள் 102 பேருக்கு பட்டங்களை வழங்கினார் . நீதிபதி, பட்டமளிப்பு விழா உரையில். ” வேகமாக வளர்ந்து வரும் மருத்துவத்தில் மருந்தாளுநர்களுக்கு அரிய வாய்ப்புகளும் முக்கிய பங்கும் உள்ளன. அதனை தக்கநேரத்தில் பயன்படுத்தி சேவை செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் கோயம்புத்தூர், கேபிடல் பார்மா நிர்வாக இயக்குனர் எஸ்.காசி, விருதுநகர் அரசு மருத்துவமனை துறைத்தலைவர் டாக்டர் எஸ்.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினர். மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன்
கலந்து கொண்டு பட்டங்களைப் பெற்றனர். கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
கலசலிங்கம் பார்மசி கல்லூரி 28வது பட்டமளிப்பு விழா
