• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

களரி விழா முள் படுக்கையில் பக்தர் வினோத வழிபாடு

ByG.Ranjan

Jun 13, 2024

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வரலொட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. சோணை முத்தையா – கலுவடையான் கோவில். இக்கோவில் ஆண்டு தோறும் வைகாசி பொங்கல் விழா மற்றும் களரி விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கோவில் களரி பொங்கல் விழா நடை பெற்றது. பக்தர்கள் அனைவரும் புல்லலக் கோட்டையில் உள்ள பொளச்சி யம்மன் கோவிலில் வழிபாடு செய்து விட்டு சோணை சாமிக்கு பூஜை செய்தனர். அதன் பின்னர் சாமி ஆட்டத்துடன் பெட்டி ஊர்வலம் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சயாக காரியாபட்டி யை சேர்ந்த ராமர் என்ற பக்தர் சாமி ஆட்டத்துடன் வந்து முன் படுக்கையில் தலை குப்புற கவிழ்ந்து சிறுது நேரம் காத்திருந்து வினோதமாக பக்தியுடன் வழிபாடு செய்தார்.