திருத்தங்கல் அருகே உள்ள சத்யா நகரில் விநாயகர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது .கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்க வேண்டும் என விநாயகர் கோவில் கும்பாபிஷேக கமிட்டியினர் முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திரபாலாஜிக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
அதனை ஏற்று கோவில் பணிகள் நடைபெறுவது குறித்து கேட்டறிந்து மேலும் கோவில் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற ரூபாய் ஒரு லட்சம் நிதி வழங்கினார்.

ஒரு லட்சம் நன்கொடை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜிக்கு திருப்பணி குழு கமிட்டினர் நன்றி தெரிவித்தனர்.