தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளங்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து செங்கோட்டையில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் வருகிற 6-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம். கனிமவளங்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க.வை கண்டித்து செங்கோட்டையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் வருகிற 6-ந்தேதி ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை அ.தி.மு.க. பொதுசெயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 45 மாதங்களாக நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியில் கனிமவளக்கொள்ளை உள்ளிட்ட ஊழல் முறைகேடுகள், கொலை, கொள்ளை, வழிப்பறி, தொடர் பாலியல் வன்கொடுமைகள் என மக்கள் விரோத செயல்களை தடுக்க முடியாமல் தி.மு.க. அரசு திணறி வருகிறது. தென்காசி மாவட்டத்தில் இருந்து தினமும் பல்லா யிரக்கணக்கான டன் கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு தி.மு.க. அரசு உறுதுணையாக இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் துரோகத்தை செய்து வருகிறது. செங்கோட்டையில்….. கனிமவளங்களை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு களை சிறிதும் மதிக்காமல் அனுமதிக்கப்பட்ட அள விட கூடுதலாக கனிம வளங்களை அள்ளிசெல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் பல்வேறு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் புதிய குவாரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இங்கு இருந்து கல், எம்.சாண்ட், ஜல்லி போன்ற கட்டுமான பொருட்கள் சட்டவிரோதமாக கேரவிற்கு எடுத்து செல்வதை தடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி. மு.க. சார்பில் பல்வேறு புகார்கள் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.