• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஜயின் ஆசை நிறைசையாகிவிடும் என கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி…

ByK Kaliraj

Jan 5, 2026

சிவகாசியில் தேர்தல் களப்பணியாற்ற உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு அறுசுவை கறி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று விருந்து பரிமாறிய முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கட்சியை நிர்வாகிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி,

பெருந்தலைவர் காமராஜரின் புகழை யாராலும் அழிக்க முடியாது

தலைவர் காமராஜரின் புகழை குறைப்பதற்காக சதி செயல் செய்துள்ள முக்தாருக்கு அதிமுக கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது

முக்தாரை கண்டித்து வரும் 9ம் தேதி நாடார் மஹாஜன சங்கம் நடத்தும் போராட்டத்திற்கு அதிமுக தார்மீக ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ள அவர் போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்

முத்தாரை தமிழக அரசு கைது செய்தால்தான் காமராஜர் போன்ற சமுதாய புரட்சியை உருவாக்கிய, நாட்டுக்காக உழைத்த தலைவர்களை பேசி விளம்பரம் தேடிக்கொள்ளும் நிகழ்வுகளை தடுக்க முடியும்

எந்தத் தவறும் செய்யாத சவுக்கு சர்க்கரை தேடி தேடி சென்று கைது செய்த தமிழக அரசு பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறாக பேசி பிரச்சனையை ஏற்படுத்தி வரும் யூடியூப்பர் முக்தாரை இதுவரை தமிழக அரசு கைது செய்யாதது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது,

திமுகவின் அனுதாபியாக உள்ளதால் திமுகவினர் பேச வைத்தார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது

காந்தியின் பெயருக்கும் புகழுக்கும்பெருமை சேர்க்கும் அரசுதான் பாஜக அரசு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோளுக்கு இணங்க 100 நாள் வேலை திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்பட்டு வாரம் ஒரு முறை அதற்கான ஊதியம் வழங்கப்படும்

அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு என்பது அரசு ஊழியர்களை விருந்துக்கு அழைத்து வெந்நீர் ஊற்றியது போல் உள்ளது

புதிய ஓய்வூதிய திட்டத்தில் பல்வேறு தவறுகள் உள்ளது, புதிய ஓய்வூதிய திட்டம் என்பது ஏமாற்று வேலையாக உள்ளது

ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாட 5000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி போராடினார், போராட்டத்தின் விளைவாக திமுக அரசு 3000 ரூபாய் அறிவித்துள்ளது,

மக்கள் விரும்புவது 5000 ரூபாய், 3000 ரூபாய் வழங்குவது ஏற்புடையதல்ல

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்த ஆண்டு தைப்பொங்கலுக்கு எடப்பாடி பழனிச்சாமி பொங்கள் பரிசு தொகுப்புடன் 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவார்

அதிமுகவிற்கு வரும் சட்டமன்றத் தேர்தல் கடைசி தேர்தல் என காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் கூறிய கருத்திற்கு பதில் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

இயலாதவர்களின் வார்த்தையாக உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி எந்த நிலைமையில் உள்ளது என்பதை அக்கட்சியின் எம்பி ஜோதிமணியே சொல்லிவிட்டார்.

காங்கிரஸ் கட்சி கலகலத்து போய்விட்டது,

திமுகவின் தோலில் ஏறிதான் காங்கிரஸ் கட்சியால் சவாரி செய்ய முடியும்.

கிளைக் கழகம், வட்டக்கழகம், வார்டுக்கழகம் என கீழ்மட்டம் வரை ஆச்சாரமுள்ள கட்சிகள் அதிமுகவும், திமுக மட்டுமே.

நாங்கள் திமுகவை பேசுவோம் திமுக எங்களைப் பற்றி பேசலாம், எங்களுக்குள் வலு உள்ளது, ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு எல்லாம் அந்த வலு கிடையாது எனவே காங்கிரஸ் கட்சியினர் எங்களை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை,

அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது

பொங்கல் பண்டிகைக்கு பின்னர் அதிமுகவிற்கு எந்தெந்த கட்சிகள் எத்தனை அமைப்புகள் ஆதரவு தர உள்ளார்கள் என்பதை தமிழக மக்களும், திமுக, காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளும் பார்க்க போகிறீர்கள்.

பலமான கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி அமைப்பார், எங்கள் பக்கத்தில் வரக்கூடிய வாய்புள்ளவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

தவெக களத்திலேயே கிடையாது, அவர்களெல்லாம் போக்கஸ்தான்

களத்தில் இருக்கக்கூடியது அதிமுகவும் திமுகவும் தான், அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது,

யானையை பார்க்க வெள்ளெழுத்து தேவையில்லை.

அதிமுக என்ற சினம் கொண்ட சிங்கமும், திமுக என்ற மதம் கொண்ட யானைத்தான் களத்தில் உள்ளது, திமுக என்ற மதம் கொண்ட யானையை சினம் கொண்ட சிங்கமாக எடப்பாடி பழனிச்சாமி வீழ்த்துவார்.

சினிமா நட்சத்திரங்கள், உச்ச நட்சத்திரங்கள் யார் வந்தாலும் மக்கள் கூட்டம் கூடுவார்கள்.

ஒரு கடையை திறந்து வைக்க வந்தால் கூட கூட்டம் கூடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும், அதெல்லாம் ஓட்டாக மாறக்கூடிய வாய்ப்பே கிடையாது

விஜயின் ஆசை நிறைசையாகிவிடும்.

வரும் சட்டமன்ற தேர்தல் களம் தவெகவிற்கு பல பாடங்களை கற்பிக்கும்,

தேர்தல் களத்தில் போராட வேண்டும் என்றால் பூத்தில் ஆட்கள் வேண்டும்,

அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்து தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள கட்சிகள் திமுகவும் அதிமுகவும் மட்டுமே

காங்கிரஸ் கட்சிக்கும், தவெகவு போன்ற கட்சிகளுக்கு 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த ஆட்களே கிடையாது

பொங்கலுக்குள் அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தவெகாவில் இணைவார்கள் என செங்கோட்டையன் தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி,

அதிமுகவையும் எடப்பாடியாரையும் விட்டு ஒருவரும் சொல்லமாட்டார்கள் என்பது உறுதி.

அதிமுகவை விட்டு 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறியவர்கள் தவெகவில் இணைந்தால் அவர்கள் அதிமுக என கணக்கு கிடையாது.

இதுபோன்று செல்வது எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் நடந்துள்ளது, இப்பொழுதும் நடக்கிறது.

அவர்களெல்லாம் காலாவதியானவர்கள், அவர்கள் செல்வதால் அதிமுகவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படாது.

அதிமுக எந்த சலசலப்புக்கும் அஞ்சாவது

உழைக்கும் அத்தனை பேரும் எடப்பாடி பழனிச்சாமியின் கைபிடித்து வருகிறோம்.

அரசியலை விட்டு ஒதுங்கியவர்கள் மாற்றுக் கட்சிகளுக்கு சென்றால் அதை அதிமுக என கணக்கில் எடுத்தால் அது ஏமாற்று வேலை,

இஸ்லாமிய சமுதாய மக்களின் ஓட்டு அதிமுகவிற்கு முழுமையாக கிடைக்கும்

கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு

கூட்டணி என்பது துண்டு மாதிரி கொள்கை என்பது வேஷ்டி மாதிரி, நாங்கள் துண்டை கூட இழப்போம் வேஷ்டியை இழக்க மாட்டோம்.