வ.உ.சிதம்பரனார் திருவுருவசிலை வளாக கட்டுமானபணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும் , விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி உதவி என்று யார் கேட்டு வந்தாலும் இல்லை என்று கூறாமல் நாள்தோறும் உதவி செய்து வருகிறார்.எந்தவித சமுதாய பாகுபாடுமின்றி அனைத்து தரப்பினருக்கும் நிதி உதவி செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி திருத்தங்கல் கீழத்தெரு பிள்ளைமார் சங்கம் சார்பாக அமைக்கப்பட்டுவரும்… வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவசிலை வளாக கட்டுமானபணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி
2இலட்சம் ரூபாய் நிதியுதவியாக திருத்தங்களில் உள்ள தனது இல்லத்தில் வைத்து சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார்.நிதி உதவி பெற்றுக் கொண்ட பிள்ளைமார் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரபாலாஜிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.




