வாக்குச்சாவடி முகவர்களான BLA2 அவர்களின் பணிகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் …

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இல்லத்தில் 2026 சட்டமன்றத்தேர்தல் அதிமுக வின் வெற்றிக்கான களப்பணிகள் குறித்தும், எஸ்ஐஆர் (SIR) பணிகள் மற்றும்
வாக்குச்சாவடி முகவர்களான BLA2 அவர்களின் பணிகள் குறித்தும் விருதுநகர் மாவட்ட கழக நிர்வாகிகளுடன் ராஜேந்திரபாலாஜி ஆலோசனை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக விருதுநகர் மத்திய மாவட்ட மாணவர் அணி செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.




