மதுரையில் வருகின்ற 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது அதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என முருக பக்தர்கள் மாநாடு கமிட்டி சார்பில் மாநில செயலாளர் சேவகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும். முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜியிடம் விழா அழைப்பிதழை வழங்கினர்.

அழைப்பிதழை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும். தானும் விழாவில் கலந்து கொள்வதாக தெரிவித்து மாநாட்டிற்காக ஒரு லட்சம் நன்கொடை வழங்கினார்.
நன்கொடையினை பெற்றுக் கொண்ட முருக பக்தர்கள் மாநாட்டு குழுவினர் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜிக்கு நன்றி தெரிவித்தனர். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.







; ?>)
; ?>)
; ?>)