• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி பலி..,

ByKalamegam Viswanathan

Jun 11, 2025

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே,வடகரை கிராமத்தில் ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலையில் இன்று வழக்கம்போல் 175 பேர் வேலை செய்து வந்தனர். வானில் வர்ண ஜாலம் காட்டும் பேன்சி ராக பட்டாசுகள் தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது.

தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் அங்கிருந்த 3 பட்டாசு தயாரிப்பு அறைகள் இடிந்து சேதமானது. சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெடி விபத்தில் தண்டியனேந்தலை சேர்ந்த கருப்பையா (38), பேச்சியம்மாள் (40), கல்குறிச்சியை சேர்ந்த செளன்டம்மாள் (54) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் கணேசன் (50) செல்லப்பன் (45) உள்ளிட்ட 3 பேர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் ஆய்வு நடத்தினார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காரியாபட்டி போலீசார் நடத்திய விசாரணையில் ரசாயன மூலப் பொருட்களில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.