• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

அதிமுக ஊழல் கட்சி என விமர்சித்த விஜய்க்கு கே. டி. ஆர் பதிலடி..,

ByK Kaliraj

Feb 3, 2026

சிவகாசியில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,
,

காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட பாஜக ஆட்சியில் தமிழக வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது
அதிமுக எப்போதும் யாரிடமும் அடிமையாக இருந்தது கிடையாது

திமுகதான் தங்களையும் தங்கள் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக டெல்லிக்கு சென்றால் மத்திய அரசிற்கு அடிபணிவதும் தமிழகத்திற்கு வந்தால் மீறி பேசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள்,

அடிமை யார்? அன்போடு இருப்பவர்கள் யார்? என்பது தமிழக மக்களுக்கு தெரியும்

அதிமுக பாஜக கூட்டணி ஒரு அன்பான கூட்டணி

திமுக வைத்துள்ள காங்கிரஸ் கூட்டணி அடிமைத்தனமான கூட்டணி

அதிமுகவை விஜய் ஊழல் கட்சி என கூறியது குறித்த கேள்விக்கு,

கனிந்த மரத்தில் தான் கல்லடி படும், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என பெருவாரியான பத்திரிகை கணிப்புகள் சொல்வதை பொறுக்க முடியாதவர்கள் அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்து வருகிறார்கள்

200 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்பவர்கலெல்லாம் யோக்கியர் போல் பேசி வருகிறார்கள்,

எம்ஜிஆர் நடிகராக இருந்தார் அரசியலில் நடிக்கவில்லை, இன்றைக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள்

அரசியலில் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், நேர்மையாக உண்மையாக நடந்தால் மட்டுமே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்

இன்றைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உண்மையான கருத்துக்களை சொல்லி வருகிறார், உண்மையான நிலவரத்தை பேசுகிறார்

தமிழகத்திற்கு தேவையான நிதிகளை மத்திய அரசிடமிருந்து கேட்டு பெறுகின்ற உரிமையும் கடமையும் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி

நாங்கள் கேட்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற இடத்தில் மத்திய அரசும், பிரதமர் மோடியும் இருக்கிறார்

தமிழக அரசின் தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய அரசிடம் அனுகூலமாக பழகும் தலைவர் வரவேண்டும், அந்த தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்

திமுக திட்டங்களை அதிமுக காப்பியடித்து தேர்தல் அறிக்கையாக வெளியிடுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த கே.டி ராஜேந்திர பாலாஜி,

2021 தேர்தலில் அதிமுக அறிவித்த தேர்தல் அறிக்கையை காப்பியடித்து தனது மீடியா பலத்தால் அதை மிகைப்படுத்தி காட்டியவர்கள் திமுக

அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் தமிழக மக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் தேர்தல் அறிக்கை குழு நேரில் பேசி கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மூலம் தேர்தல் அறிக்கை தயாரித்து வெளிப்படுகிறது

தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற வில்லை என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கவே தங்களது திட்டங்களை காப்பியடிபதாக கூறி திமுக போடும் நாடகம் என பதில் அளித்துள்ளார்.

இந்த தேர்தல் திமுகவிற்கு மிகப்பெரிய தோல்வியை கொடுக்கும்

அதிமுக மிகப்பெரிய வெற்றியைப்பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார்