எம் .கே. கிராண்ட் கார் ஸ்டுடியோ மற்றும் கார் சர்வீஸ் சென்டர் தலைமை அலுவலகம் சிவகாசி அருகே உள்ள மண்குண்டம் பட்டியில் இயங்கி வருகிறது. இதனுடைய புதிய கிளை சிவகாசியில் தொடங்கப்பட்டது.

அதற்கான நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி அலுவலகத்தில் உள்ள பூஜை அறையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
தொடர்ந்து கார் சர்வீஸ் சென்டரில் பணியாற்ற பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.
திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறுவர்கள், சிறுமிகளிடம் சிறிது நேரம் உரையாடி அவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
கார் சர்வீஸ் சென்டரில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து கேட்டார். அப்போது கார் கம்பெனி உரிமையாளர் மாரீஸ்வரன் அலுவலகத்தில் ஆண்ட்ராய்டு சிஸ்டம், காருக்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும் ரிமோட்டுடன் சென்டர் லாக், எக்ஸ்ட்ரா லைட், காரில் ஆண்ட்ராய்டு டிவி சிஸ்டம், டிஸ்பிளே உள்ளிட்ட காரை பராமரிக்க தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதாக தெரிவித்தார்.
உரிமையாளர் மாரீஸ்வரனிடம் இருந்து முதல் விற்பனையை முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் அதிமுக கிழக்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் தங்கவேலு,விஜய கரிசல்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கங்காள ஈஸ்வரி உள்பட முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.








