விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் உள்ள தனியார் மஹாலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்எல்ஏ சந்திர பிரபா முத்தையா, பிலிப்பாசு , கணேசன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது
திமுக தொடர்ந்து பொய்யென வாக்குறுதிகளை அளித்து வருகிறது.
இதனால் தமிழக மக்கள் வெறுப்படைந்துள்ளனர். நான்காண்டுகளாக தைப்பொங்கலுக்கு ஒரு பைசா கொடுக்காத ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் கொடுத்த கண்டனம் காரணமாக ரூபாய் 3000 கொடுத்துள்ளார். இதை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இவர் எதைக் கொடுத்தாலும் தமிழக மக்களின் கோபத்தை சாந்த படுத்த முடியாது.
ஆட்சி மாற்றம் தான் தமிழக மக்களின் கோபத்தை சாந்த படுத்த முடியும்.
படித்தவர்கள், ஏழைகள், உழைப்பாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் குறிப்பாக பட்டாசு தொழிலாளர்கள் என அனைத்து தொழில் செய்யும் தொழிலாளர்களும் பாதிப்படைந் துள்ளனர் உற்பத்தியாளர் உழைப்பாளர் தொழில் செய்ய முடியவில்லை உற்பத்தியாளர்கள் தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமும் துணையும் நிற்பதில் என குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தத் தமிழ் மண்ணில் பிரிவினையை யார் விதைக்க வந்தாலும் அது ஒரு காலமும் நடக்காது. அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். பெரும் பான்மை, சிறுபான்மை என எல்லோருக்குமான எடப் தலைவனாக விளங்கக்கூடிய பாடி பழனிச்சாமியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அவரை வெற்றிபெறச்செய்துதமி ழக முதல்வர் நாற்காலி யில் அமர வைக்க வேண்டும். எல்லா மக்க ளுக்கும் அனைத்து செல் வங்களும் கிடைக்க எடப் பாடி பழனிச்சாமி பாடுப்படுவார். தொழில் வளம், நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்து துறைகளும் உயர, மக்கள் நேசிக்கும் உண்மையான தலைவன் எடப்பாடி பழ னிச்சாமியை முதல்வராக அமரச்செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற் றத்தை கொண்டு வந்து அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைப்போம் என்றஉறுதியோடு செயல் படுவோம். என்றார்.





