விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிவகாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளூர், மத்திய சேனை, செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, உள்ளிட்ட பகுதியில் பூத்து கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே டி ராஜேந்தர் பாலாஜி கலந்து கொண்டு பேசியது,

அதிமுகவில் புதியதாக பட்டதாரி இளைஞர்கள், இளம்பெண்கள், அதிக அளவில் இணைந்து வருகின்றனர். திமுக ஆட்சியில் அனைத்துப் பொருட்களும் விலை உயர்ந்துள்ளது.விலை உயராத பொருட்கள் என்று ஏதும் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கட்டுமான பொருட்களான சிமெண்ட், செங்கல், விலை உயர்வினாலு நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்காமல் அவதிப்படுகின்றனர்.
விலை ஏற்றத்திற்கு திமுக தான் காரணம் அதிமுக ஆட்ம ஆட்சியில் திருமண உதவித் திட்டம் தாலிக்கு தங்கம் மானிய விலையில் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் உட்பட ஏராளமான திட்டங்கள் ஏழை மக்கள வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் சீரியதித்தினால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை எடப்பாடியார் சிறப்பாக நிறைவேற்றிக் காட்டிய பொற்காலாட்சி மீண்டும் வளர அதிமுகவிற்கு ஆதரவு தர வேண்டும்.
அதிமுக வெற்றி பெற வேண்டுமென குடும்பத்தில் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டு வருகின்றனர். எடப்பாடியார் பிறந்த நாளில் இரவு பகல் பாராமல் அதிமுகவினர் செயல்பட வேண்டும் அதற்காகத்தான் பூத்து கமிட்டி கூட்டம் இரவு 11 மணி வரை ஆனளும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் அதிமுக தொண்டர்களிடம் எழுச்சி மற்றும் உற்சாகம் அதிகரித்துள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அறிவித்த இலவச திட்டங்களை மக்கள் புறக்கணிக்க தயாராகி விட்டனர். இனி திமுகவினர் ஏமாற்று வேலை பலிக்காது அதிக பெரும்பான்மையான அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெற்று முதலமைச்சர் ஆக எடப்பாடியார் பதவி ஏற்பார். அதற்கு தமிழ்நாட்டில் சிவகாசி சட்டமன்ற தொகுதி வெற்றி முதல் படியாக இருக்கும் என பேசினார்.
நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமாரன், சிவகாசி யூனியன் முன்னாள் சேர்மன் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன் உள்ளிட்ட சிவகாசி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.