• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஜோதிமணியின் போராட்டமும்.. கரூர் ஆட்சியரின் ட்வீட்டும்..

Byமதி

Nov 26, 2021

கரூரில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான முகாம்களை நடத்தவில்லை என குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் சென்று, விரைவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான முகாம்கள் நடத்தப்படுமென உறுதியளித்தார். இருப்பினும், கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் மீது புகார்களை முன்வைத்து, தலைமைச் செயலர் இறையன்புவிற்கு எம்.பி. ஜோதிமணி புகார் மனு அனுப்பியுள்ளார்.

அதில், கரூர் ஆட்சியர் பிரபுசங்கரின் மேசையிலிருந்து இரண்டு சதவிகிதம் வரை கட்டாய வசூல் முடிந்த பிறகுதான் கோப்புகள் நகரும் என்று மக்கள் மத்தியில் பரவலாக கருத்து நிலவுவதாக ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார். கரூர்‌ ஆட்சியர்‌ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் அவர் கோரியுள்ளார்.

மேலும், 10 மணி நேரத்தை கடந்தும் நேற்று இரவு 10 மணி ஆகியும் ஜோதிமணியின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் “வாய்மையே வெல்லும்” என்று பதிவிட்டுள்ளார்.