• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜாய் பல்கலைகழகத்தில் நீதிமன்றம் மாதிரி அரங்கத்தை திறந்து வைத்த நீதியரசர் – எல்.சி. விக்டோரியா கவுரி…

வடக்கன் குளத்தில் ஒரே ஆண்டை கடந்துள்ள ஜாய் பல்கலைகழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட நீதிமன்ற மாதிரி அரங்கத்தை, குமரி மாவட்டத்தை சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் திருமதி.எல்.சி விக்டோரியா கவுரி அவர்கள் திறந்து வைத்ததுடன், ஜாய் பல்கலைக்கழகம் மாணவர்கள் மத்தியில் சட்ட படிப்பின் முக்கியத்துவம் குறித்தும், வேலைவாய்ப்புகள் பற்றியும், கடினமான பயிற்சி செய்து சட்டம் நுணுக்கமான பகுதிகளை கற்று தலைசிறந்த வழக்கறிஞர்களாக உருவாகி சார்ந்த குடும்பத்திற்கும், மக்கள் சமுகத்திற்கும்,புகழ் சேர்க்க வாழ்த்தினார்.

விழாவிற்கு ராஜாஸ் கல்வி குழுமங்களின் தலைவர் ஜாய் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் எஸ்.ஏ.ஜாய்ராஜா தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் செல்வம் கல்வி அறக்கட்டளை தலைவர் திருமதி.ஜெயமாதா பொறியியல் கல்லூரி தாளாளர் எஸ்.ஏ. ஜான்செல் ராஜா,ஜாய் பல்கலைக்கழகம் இணைவேந்தர் திருமதி.ஜீனோ ஜாய் ராஜா, ஜாய் பல்கலைக்கழகம் துணை வேந்தர் டாக்டர்.எஸ்.ராஜோஷ், பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஜோன்ஸ், போராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் மற்றும் ஜாய் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும் பங்கேற்றனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி.L.C. விக்டோரியாகவுரி அவர்கள்
வடக்கன்குளம் ஜாய் பல்கலைகழகத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு
நீதிமன்ற மாதிரி அரங்கத்தை திறந்து வைத்தார்கள். பின்பு மாணவர்கள் மத்தியில் சட்ட படிப்பின் முக்கியத்துவம் குறித்தும், வேலைவாய்ப்புகள் பற்றியும் கடினமாக பயிற்சி செய்து சட்ட நுனுகங்கங்களை கற்று தலைசிறந்த வழக்கறிஞராக வேண்டும் என்று சிறப்புரை ஆற்றினார்கள். விழாவிற்கு ராஜாஸ் கல்வி குழுமங்களின் தலைவர், ஜாய் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் திரு. எஸ்.ஏ. ஜாய் ராஜா தலைமை தாங்கினார்.

நிகழ்வில் செல்வம் கல்வி அறக்கட்டளை தலைவர் திருமதி. சோபியா ராஜா, ஜெயமாதா பொறியியல் கல்லூரி தாளாளர் எஸ்.ஏ. ஜான்செல் ராஜா, ஜாய் பல்கலைக்கழக இணை வேந்தர் திருமதி.ஜீனோ ஜாய் ராஜா, ஜாய் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர்.எஸ்.ராஜேஸ், பல்கலைக்கழகம் பதிவாளர் டாக்டர் ஜோன்ஸ், பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.