• Mon. Apr 29th, 2024

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வித்தியாசமான குழப்பத்தை திமுக கூட்டணிக்குள் பூகம்ப சுவரொட்டியா.? புஸ்வாணமா.?

குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 67-வது ஆண்டை(நவம்பர்_1)ம் நாளில், கட்சி, இனம்,மொழி கடந்து அனைவரும் ஒன்றாக ஐயா மார்சல் நேசமணியை கொண்டாடி, மகிழ்ந்து தமிழகத்துடன் குமரி இணைந்ததை கொண்டாடும் நாளில்.சுவர்களில் காணும் சுவரொட்டியின் உள் நோக்கம் என்னவாக இருக்கும் !? என தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மாநில கட்சிகளை சார்ந்தவர்களிடம்,பதில் சொல்பவர்கள் முகம்,பெயரை பொதுவெளியில் தெரிவிக்காதது,கருத்துகளை மட்டுமே பொது வெளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமரியில் கடற் கரை பகுதியில் உள்ள மீனவ மக்கள் பலரிடம் கேள்வியை வைத்தபோது பெரும்பான்மை கருத்து.மீனவ சமுகத்திற்கு வாய்ப்பு கேட்போம். வேட்பாளர் பெயரை அறிவித்து விட்டபின் எந்த நிலையிலும் பாஜக இங்கு வெற்றி பெற்று விடக்கூடாது என்பதால் மீனவ சமுகம்.நீரோடி தொடங்கி,அரோக்கியபுரம் வரை உள்ள மீனவர்கள் நாங்களே முன் வந்து காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெற இத்தனை காலம் செய்து வருகிறோம். இரண்டு முறை பாஜக வெற்றி பெற்றது காங்கிரஸ்,திமுக தனி தனியா போட்டியிட்ட போது தான் என கடந்த கால அரசியலை துல்லியமாக தெரிவித்தார்கள்.

இங்கு சிறுபான்மை என்ற சொல்லிற்கே இடம் இல்லை. குமரி மாவட்டம் ஒரு பாரம்பரிய காங்கிரஸ் ஆதரவு மாவட்டம் அதனால் போட்டியிடும் கட்சி,அதன் கூட்டணி கட்சிகள் எவை, எவை என்பது மட்டுமே.

சுவரொட்டி ஒட்டியுள்ள கட்சி அவர்கள் கட்சியில் அண்மையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு புதிதாக பதவிக்கு வந்தவர்கள் இடையே ஆன உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப தி. மு க.,கூட்டணிக்குள், குமரி மாவட்டத்தில் குழப்பம் இருப்பது போல் காட்ட காங்கிரஸ் கட்சியை வம்புக்கு இழுத்துள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சியினர் இதனை கண்டு கொள்ளாது இருந்தால் அந்த ஒற்றுமை சுவரொட்டி நபர்களுக்கு சொல்லும் பதிலாக அமைந்துவிடும் என தெரிவித்தார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பார்வைக்கு இந்த சுவரொட்டி போனால். காரணமானவர்களை நேரில் அழைத்து எச்சரிக்கை தெரிவிப்பார் என இந்த கட்சியின் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ஒரு மூத்த கட்சி காரர் தெரிவித்ததுடன். இந்த சுவரொட்டி இந்த மாவட்ட அரசியலுக்கு ஒரு கெடுதலும் செய்யாது என்று தெரிவித்தார்.

பொதுவுடைமை கட்சியின் இரு பிரிவுகளில் உள்ள காம்ரேட்டுகளிடம் கேட்டபோது. நேரம் போகாதவர்களின் முதுகில் சொரிதல் போல் என்று கூலாக ஒரு புன்னகையுடன் கடந்து போனார்கள்.

பாஜகவின் கிழக்கு, மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்,கட்சியினரிடம் கருத்து கேட்ட போது. இது ரொம்ப முக்கியம் போங்கள்.நாங்கள் செல் வாக்காக இருப்பதை நாங்கள் கூட்டும் கூட்டங்களில் மக்கள் (ஆண்கள், பெண்கள்) அதிகம் இருப்பது என்னவோ உண்மைதான்.

தமிழகத்தில் இப்போதைய அரசியல் சூழலில் நாங்கள் தனிமை பட்டு நிற்கிறோம். இதில் போய் சிறுபான்மை சமுக வேட்பாளர் என்ற கருத்து எல்லாம் எதற்கு. கூட்டத்திற்கு போனமா,சுண்டல் வாங்கி தின்றோமா என கடந்து போய்விட வேண்டும் என்ற அவர்களது விரக்தி நிலையை தெளிவாக வெளிப்படுத்தினர்.

எல்லாவற்றையும் எதிர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் கை பேசி ஒட்டு கோட்பு ஒரு பெரிய அணுகுண்டாக வெடித்திருக்கும் நிலையில். இத்தகைய சுவரொட்டி ஒரு தூசி என்பது,பொதுவான இளைஞர்களின் கருத்தாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *