• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் மட்டுமே வெற்றி பெற முடியாது -தினகரன்

ByA.Tamilselvan

Feb 8, 2023

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது என தினகரன் பேட்டி
சென்னையில் அமமுக பொதுச்செயலாள் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது.. 2024 நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட எந்த தடையும் இல்லை. இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஏன் வழங்கவில்லை என்பது புரியவில்லை . இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரசாரம் செய்து வந்தோம். குக்கர் சின்ன விவகாரத்தில் போதிய நாட்கள் இல்லாததால் நீதிமன்றம் செல்லவில்லை. இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாது. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொண்டர்களுக்கு தெரியும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.