மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மேட்டுக்கடை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெக்காளியம்மன், ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் 11 ஆம் ஆண்டு களரி விழாவில், சிறப்பு யாகம், முளைப்பாரி வைத்து கும்மி அடித்தல் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, முளைப்பாரி ஊர்வலம் மற்றும்அக்னி சட்டி எடுத்தனர். விழாவையொட்டி,
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி தனம் அம்மாள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.