• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

‘வார் 2’ திரைப்படத்தில் வில்லனாக களமிறங்கும் ஜூனியர் என்டிஆர்

Byவிஷா

Feb 26, 2024

நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் ‘வார் 2’ திரைப்படத்தில், ஜூனியர் என்டிஆர் வில்லனாக களமிறங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவர் ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு தேவரா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் அக்டோபர் 10ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் பாலிவுட் பக்கம் திரும்பவுள்ளார். அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வார் என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பைட்டர், பதான் உள்ளிட்ட படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். அடுத்ததாக சித்தார்த் ஆனந்த், ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வார் 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியாகியிருந்தது.
அதேசமயம் இந்த படத்தில் ஹிரித்திக் ரோஷனுடன் இணைந்து ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் வார் 2 படத்தில் ஜூனியர் என்டிஆர் வில்லனாக களமிறங்க இருக்கிறாராம். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.