• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணை தெறிக்கவிட்ட நடன இயக்குனர் சாண்டி

RRR படத்தின் பட விழாவில் தன் நடனத்தால் ஒட்டு மொத்த அரங்கத்தையும் தெறிக்கவிட்டு அதகளம் செய்துள்ளார் நடன இயக்குனர் சாண்டி.

பாகுபலி பிரம்மாண்ட வெற்றியைதொடர்ந்து ராஜமௌலி அவர்கள் தற்போது ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்'(RRR) என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இயக்குனர் ராஜமௌலி இயக்கிய படங்கள் எல்லாமே வெற்றிபெற்றுள்ளது.

அந்த வகையில் தற்போது ராஜமௌலி இயக்கியுள்ள RRR படத்தில் ஜூனியர்என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ளார்கள்.இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளது. அதோடு சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.


மேலும், பல தடைகளுக்கு பிறகு இந்த படம் ஜனவரி 7ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சென்னையில் RRR படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்கள்.

RRR படத்தின் பிரமோஷன் விழா சிறப்பாக நடைபெற்றதுஇந்நிலையில்ஆர் ஆர் ஆர் படத்தின் விழாவில் சாண்டி மாஸ்டர் தெறிக்கவிடும் நடனத்தை ஆடி இருந்தார். அதில் அவர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இதற்கு முன் நடித்த படங்களின் தொகுப்புகளை சேர்த்து நகைச்சுவையாகவும் நடனம் ஆடி இருந்தார்.இதை பார்த்த RRR படத்தின் ஒட்டு மொத்த குழுவும் எழுந்து நின்று கைதட்டி இருக்கிறார்கள். பின் அனைவரும் சாண்டியை பாராட்டியிருக்கிறார்கள்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடன இயக்குனராக தனது பயணத்தை துவங்கியவர் சாண்டி. தற்போது சிம்பு முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை கொரியாகிராஃப் செய்யுமா அளவிற்கு வளர்த்துள்ளார்.


அதுமட்டுமில்லாமல் 2019ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.