சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஜூன் 26 உலக போதை பொருள் தடுப்பு தினமான இன்று முதல் 15 நாட்களுக்கு குளோபல் மிஷன் மருத்துவமனை காரைக்குடி மற்றும் காவல்துறை, வருவாய்துறை, கல்வித்துறை, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி ரோட்டரி சங்கம் இணைந்து மாபெரும் போதை பொருள் ஒழிப்பு கையெழுத்து மற்றும் உறுதிமொழி ஏற்பு வாகன பேரணி தொடங்கியது. இன்றிலிருந்து 15 தினங்களுக்கு சிவகங்கை மாவட்டம் முழுவதிலும் உள்ள கல்லூரி மற்றும் அரசு பள்ளி தனியார் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கையெழுத்து பிரச்சாரம் நடைபெறும் என்பதை தெரிவித்தனர். மேலும், இவ்விழாவினை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் முத்துக்களுவன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார் குளோபல் மருத்துவமனை மருத்துவர் குமரேசன் மருத்துவர் செந்தில்குமார் மருத்துவர் கோடீஸ்வரன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு பேரணியை வாகனத்தை கொடி அசைத்து துவங்கி வைத்தனர்.

