• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஜூன் 12 பள்ளிகள் திறப்பு : 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

Byவிஷா

Jun 10, 2023

தமிழகத்தில் வருகிற ஜூன் 12ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூன் 12ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. சொந்த ஊர் சென்ற மாணவர்கள் ஊர் திரும்ப வசதியாக 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில் சென்னைக்கு 650 பேருந்துகளும் கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு 850 பேருந்தில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.