

இந்திய திருநாடு அதன் சுதந்திரத்தின் 75வது ஆண்டை கொண்டாடும் தினத்தில் ஒரு தேசத்தின் விழாவுடன் இணைந்து “அசோக் லேலண்ட் அதன் வெற்றி பயணத்தின் ஆட்டையும் கொண்டாடுவதில் மதிப்பு மிக்க பெருமை கொள்கிறது.

சுதந்திர இந்தியாவில் கடந்த 1999_ம் ஆண்டு கார்கில் மாவட்டம் திராஸ், கச்சார், படாலிக், துர்துக் மாவட்டங்களில் 1999_ம் ஆண்டு மே திங்கள் 3_ம்தேதி முதல், ஜூலை திங்கள் 26_ம் நாள் வரை நடைபெற்ற கார்கில் யுத்தத்தின் போது ராணுவ வீரர்கள், ராணுவத்தின் அப்போதைய பயன்பாட்டு பொருட்கள், ஆயுதங்கள் என அனைத்து விதமான பயணத்தேவைக்கு போக்குவரத்து பகுதி சகதி, தண்ணீர், மணல், மேடு பள்ளங்கள் என எந்த நிலையில் இருந்தாலும் பயணப்பாதையில் அசோக் லேலண்ட் அதன் தனித்த திறன் பெற்ற வாகனங்கள் தான் கார்கில் போரின் போது பயன் படுத்தப்பட்டது என்பதை கார்கில் போரின் 24_வது ஆண்டு நினைவில் அசோக் லேலண்ட் பெருமிதம் அடைகிறது. அதன் வெற்றியை கொண்டாடவும், இன்றைய நமது இளைய பாரதத்திற்கு உணர்த்தவும் இன்று “மன்சில் க சஃபார்”(வெற்றியின் பயணம்) கன்னியாகுமரி லடாக் பயணப்படும் அசோக் லேலண்ட் மூன்று வாகனங்களில் கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆயுதங்களின் புகைப்படங்கள், போரில் வீரத்துடன் ஈடுபட்ட நம் ராணுவ தளபதிகள், படை வீரர்களின் புகைப்படங்களை தாங்கிய பயணத்தை தொடங்கியது.

அசோக் லேலண்ட் வாகனங்களின் பயணத்தை உயர் ராணுவ அதிகாரிகள் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மேலாண்மை அதிகாரிகள் கன்னியாகுமரியில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.

