திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பகுதியில் கனகசபை என்பவர் 40 ஆண்டு காலங்களுக்கும் மேலாக குடியிருந்து வரும் இடத்தை பழனி அறங்காவல் துறை ஜே.சி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அறநிலைத்துறைக்கும் இடையே வாக்குவாதம். இதனை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் முரளி செல்வா மீது அறநிலையத்துறை ஊழியர்களுடன் வந்த செக்யூரிட்டிகள் தாக்குதல் நடத்தினர்

தாக்குதலில் காயமடைந்த இரு பத்திரிகையாளர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி ஒரு தலை பட்சமாக செயல்படும் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து பத்திரிகையாளர்கள் காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 2 செய்தியாளர்களை ரெட்டியார்சத்திரம் போலீசார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








