• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
ஜார்கண்டில் சட்ட விரோத சுரங்க முறைகேடு தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். கடந்த 3-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக கூறியிருந்த நிலையில், சோரன் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் வருகிற 17-ந்தேதி ராஞ்சியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு கோரப்பட்டு உள்ளது. ஏற்கனவே அனுப்பியிருந்த சம்மன் தொடர்பாக அமலாக்கத்துறையை குறை கூறியிருந்த ஹேமந்த் சோரன், தன்னை கைது செய்ய தயாரா? என சவால் விட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.