• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானின் ஜெனகை நாராயண பெருமாள் வைகை ஆற்றில் இறங்கினார்

ByKalamegam Viswanathan

May 5, 2023

சோழவந்தானின் ஜெனகை நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்
சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர் அலங்காரத்தில் சோழவந்தான் வைகை ஆற்றில் இறங்கி வருகிறார்.இதேபோல் நேற்று காலை 8 40 மணி அளவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயணப்பெருமாள்கோவில் மிகவும் பழமை வாய்ந்த சிறப்பு மிக்க கோவில்.இக்கோவிலில் சித்ராபௌர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி வருகிறார்.இதேபோல் இந்த ஆண்டு
அதிகாலை அதிர்வேட்டு முழங்க கோவிலிலிருந்து வெள்ளை குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி புறப்பட்டு சன்னதிதெரு,46 நம்பர்ரோடு, காவல்நிலையம்,தீயணைப்பு நிலையம்,தெற்கு ரதவீதி,மேலரதவீதி வழியாக வைகை பாலம் அருகே எம்விஎம் மருதுமஹால் பாஜக விவசாயி மாநில துணைத்தலைவர் மணிமுத்தையா வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமயில்,மருதுபாண்டியன் வரவேற்று அபிஷேகம் ஆராதனை செய்து அன்னதானம் வழங்கினார்கள்.சனீஸ்வரன் கோவிலில் ராமசுப்பிரமணியன் அர்ச்சகர்கும்ப மரியாதை தீப ஆராதனை செய்து வரவேற்றனர். வட்டபிள்ளையார் கோவில் அங்கிருந்து ஜெனகநாராயணபெருமாள் வெள்ளை குதிரைவாகனத்தில் பச்சைபட்டுஉடுத்தி கள்ளழகர் அலங்காரத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். 20க்கும் மேற்பட்டவர்கள் தண்ணீர் பீச்சி கள்ளழகரை வரவேற்றனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் மிதந்து வந்தார். பட்டர் தீபாரதனை செய்தார்.அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது.அங்கிருந்த பக்தர்கள் செம்பில் சர்க்கரை வைத்து சூடம் ஏத்தி கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷமிட்டனர்.நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தினார்கள். பேரூராட்சி மன்றதலைவர் ஜெயராமன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வைகை ஆற்றின் மேற்குப் பகுதியில் உள்ள உபயதாரர் சப்தகிரி நாதன் என்ற சத்து முதலியார் மண்டகப்படியில் எழுந்தருளி அன்று மாலைவரை பக்தர்களுக்கு அருள்பாவித்தார். டிஎஸ்பி பாலசுந்தரம்,இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.சோழவந்தான் பேரூராட்சி சார்பாக சுகாதாரப் பணி, குடிநீர் வசதி ஏற்பாடு செய்திருந்தனர்,வழி நெடுக சுவாமியை வரவேற்று அன்னதானம் , பல்வேறு அமைப்புகளில் இருந்து நீர் மோர் வழங்கினார்கள்.
வைகை ஆற்றில் இருந்து கருட வாகனத்தில் சுவாமி புறப்பட்டு பேட்டை, முதலியார்கோட்டை,சங்கங்கோட்டை ஆகிய பகுதி சென்று இரட்டை அக்ரஹாரத்தில் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக உள்ள மண்டகப்படிக்கு வந்து சேர்ந்தது.
சனிக்கிழமை இரவு யாதவர்கள் சங்கத்தின் சார்பாக விடிய,விடிய தசாவதாரம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை இரவு சனீஸ்வரன்கோவில் முன்பாக முதலியார் கோட்டை கிராமமக்கள் சார்பாக பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்று கோவிலை வந்தடையும்.விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் சுதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.