• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜெயலலிதா மரணம்- இறுதி அறிக்கை அடுத்த மாதம் தாக்கல்

ByA.Tamilselvan

Jul 30, 2022

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யபடுவதாக தகவல்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், சசிகலா உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும் இன்னும் விசாரணை முடியவில்லை. இதனால் ஆணையத்தின் விசாரணை காலத்தை ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவக்குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்த குழுவினர் பலரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதன் இறுதி அறிக்கையை ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக ஆணையத்திற்கு எய்ம்ஸ் மருத்துவக்குழு தெரிவித்து உள்ளது.