சோழவந்தான் அருகே காவல்துறை அனுமதி இன்றி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள மேலக்கால் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு போன்ற வாடிவாசல் அமைத்து செக்கானூரணி மேலக்கால் சோழவந்தான் கொடிமங்கலம் குருவித்துறை தாராபட்டி போன்ற பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளும் மற்றும் 100க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஜல்லிக்கட்டில் 30க்கும் மேற்பட்ட காளைகள் களம் இறக்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் காளைகளை அடக்குவதற்கு போட்டி போட்டு சில காளைகளை அடக்கினார்கள் இளைஞர்கள் மற்றும் சில காளைகள் வெற்றி பெற்றது அதற்கு பரிசுத்தொகை மற்றும் வேஷ்டி துண்டு வழங்கப்பட்டது.
குறிப்பாக காவல்துறை அனுமதி இன்றி எந்தவித பாதுகாப்பும் இன்றி ஆபத்தை உணராமல்இளைஞர்களர் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க முயற்சித்து சில இளைஞர்களும் காயமடைந்தனர்.
காவல்துறை அனுமதியின்றி இதுபோன்று நடத்தப்படும் ஜல்லிக்கட்டால் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் தங்கள் வீரத்தை பறைசாற்ற இது போன்று நடுத்துவதால் இளைஞர்கள் பெரிதளவு காயம்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகும்.
அனுமதி இன்றி சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்றதால் அந்த பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.