புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆலங்குடி நாட்டார்கள் சார்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அன்வர் அக்பர் அலி கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள 730 காளைகளும் 330 காளையர்களும் பங்கேற்றுள்ளனர்.