அலங்காநல்லுார் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று காலை 7:00 மணியளவில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதாசோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் , மேலூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா ஆகியோர் பார்வையிட்டனர்.

மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1000 காளைகள், 650 வீரர்கள் பங்கேற்கின்றனர். வெற்றி பெறும் காளைகளுக்கும் மாடுபிடி
வீரர்களுக்கும் சைக்கிள், மிக்ஸி, மெத்தை, சில்வர் அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்டகாவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடை மருத்துவர்கள் காளைகளை சோதனைகள் செய்து அனுமதி அளித்து வருகின்றனர். சுகாதார துறை மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.