• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ராகுலுக்கு சிறை தண்டனை -சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம்

Byஜெ.துரை

Mar 24, 2023

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்:
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வகின்றனர். இந்நிலையில் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் S.பாஸ்கர் தலைமையில் போரூர் ரவுண்டானாவில் காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் கொடியை கையில் ஏந்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.