• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விஸ்வகர்மா சமுதாயத்தின் ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள்…

BySeenu

Nov 12, 2023

தமிழ்நாடு, பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவராக உள்ள விஸ்வகர்மா சமுதாயத்தின் ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள். கடந்த ஐந்து வருடமாக விஸ்வகர்மா சமுதாய மக்கள் முன்னேற்றம் அடைய பல்வேறு சமூக ஆன்மீகப் பணிகளை செய்து வரும் ஜெகத்குரு சாமிகள் அவர்கள் தற்பொழுது அரசியல் பயணமாக இந்திய தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற பிரம்மஸ்ரீ வில்வராஜன் நிறுவனத் தலைவராக உள்ள விஸ்வ பாரத் மக்கள் கட்சி என்ற கட்சியில், தேசிய பொதுச்செயலாளராக பொறுப்பெடுத்துள்ளார்…..இதைப் பற்றி ஜெகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் பேசும் பொழுதுவிஸ்வகர்மா சமுதாய மக்கள் தமிழகத்தில் 80 லட்சம் பேர் வசிக்கிறார்கள் அவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்காமல் போனதனால் பாரம்பரிய தொழில் அரசாங்க வேலை போன்றவைகள் எல்லாம் கனவாகிவிட்டது…..விஸ்வகர்மா சமுதாய மக்களுக்கு பிரச்சனைகள் வந்தால் யாரிடத்தில் கொண்டு செல்வது என்று கூட தெரியாமல் அவர்கள் வேதனைப் படுகிறார்கள். அரசியலில் உயர்ந்த இடத்தில் யாரும் இல்லாத காரணத்தினால் பல்வேறு இன்னல்களுக்கு வரும் பொழுது அவர்கள் பிரச்சினை தீர்ப்பதற்கு மிகப்பெரிய பிரபலங்கள் விஸ்வகர்மா சமுதாயத்தில் யாரும் இல்லாத சூழ்நிலையில் 10 லட்சம் பேரை நிலவேம்பு கசாயம் தந்து காப்பாற்றிய தமிழகமெங்கும் அறிந்த விஸ்வகர்மா ஜெகத் குருவாக உள்ள ஸ்ரீ பாபுஜி தற்பொழுது அரசியல் கட்சியில் சேர்ந்து சமூக மக்கள்நலன் வேண்டி இனி பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூகங்களின் கூட்டமைப்பானதுதமிழகத்தில் உள்ள அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைபணி எப்பொழுதும் தொடரும் என்றும், அரசியலில் சுவாமிகளுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அனைவரும் விஷ்வ பாரத் மக்கள் கட்சியில் உறுப்பினராகலாம் என்று தெரிவித்தார். தமிழகமெங்கும் பணியாற்றுவதற்கு அமைப்புச் செயலாளர்கள் மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டனர்.