• Mon. Mar 17th, 2025

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர்சாதிக் வீட்டிற்கு சீல்

Byவிஷா

Feb 29, 2024

போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டுக்கு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சீல் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாடுகளுக்கு சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய வழக்கில், திமுகவின் அயலக அணியின் நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் சிக்கியுள்ளார். ஜாபர் சாதிக் விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக வேண்டும் என சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் போலீசார் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால், அவர் நேரில் ஆஜராகவில்லை என்பதால், அவரது வீட்டை உடைத்து ஆவணங்களை கைப்பற்றி, அவரது வீட்டுக்கு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளனர்.