• Mon. Mar 23rd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ByP.Thangapandi

Feb 14, 2025

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி உசிலம்பட்டியில் ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த கோரி, ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் உசிலம்பட்டி கிளை ஜாக்டோ ஜூயோ அமைப்பு சார்பில் ஜாக்டோ ஜூயோ மாநில துணை பொதுச் செயலாளர் முருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் வரும் 25 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் தெரிவித்தனர்.#