• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜெ., இடத்தை பிடித்த இபிஎஸ் -அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்ட ஓபிஎஸ்

Byதரணி

Mar 28, 2023

பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி ஆன நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தீர்பின் மூலம் ஓபிஎஸ் ஆதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார் .
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார். அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்..இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


எம்ஜிஆர் மறைவுக்கு பின் அணிகள் பிரிந்து மீண்டும் இணைந்தது. அப்போது ஜெயலலிதா முதன்முறையாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.அப்போதில் இருந்து அவர் மறைவு வரை சுமார் 30 ஆண்டுகளுக்கு அவரே அந்த பதவி வகித்தார். ஜெ., மறைவுக்கு பின் சசிகலா ‘தற்காலிக’ பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதன்பின், தற்போது இபிஎஸ் எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வமாக ஓபிஎஸ் நீக்கப்பட்டார்
பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்பதால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதும் செல்லும் என உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.இதன் மூலம் இனி ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினர் அதிமுக கட்சியின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்த முடியாது. மீறி பயன்படுத்தினால், அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை பாயும்.
வாழ்த்து மழையில் இபிஎஸ்
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்வுக்கான வெற்றிச்சான்றிதழ் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.
பொதுச் செயலாளராக தேர்வான இபிஎஸ்-க்கு முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் என வரிசையாக வந்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். தலைமை அலுவலகம் திருவிழா கூட்டம் போல் ஜொலிக்கிறது.