• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதநல்லிணக்க இத்தார் நோன்பு -அமைச்சர் ஐ. பெரியசாமி பங்கேற்பு

ByKalamegam Viswanathan

Apr 17, 2023

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் திண்டுக்கல் நாயுடு மஹாலில் நடைபெற்ற மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கழக துணை பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் IP செந்தில்குமார் MABL MLA பங்கேற்றார். இந்நிகழ்வில் நாட்டமை காஜா மொய்தீன் , வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், GTN கலைக் கல்லூரி தாளாளர் . ரத்தினம், மாநகராட்சி மேயர் இளமதி, மாநகர செயளாலர் .ராஜப்பா, வர்த்தக சங்க நிர்வாகிகள், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் பகுதி வார்டு கழக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நோன்பு திறக்கும் மத நல்லிணக்க நிகழ்ச்சி விழாவை மாணவர்கள் அணி துணைச் செயலாளர் 18 ஆவது வார்டு மாநகர கவுன்சிலர் முகமது சித்தீக் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். ஏ எம் முபாரக் அலி தி.மு.கழக முன்னாள் ஒன்றிய பிரதிநிதி திண்டுக்கல் மாவட்ட தலைவர் உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.