• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விளையாட்டுத்துறைக்கு அதிக கவணம் செலுத்தியது அதிமுக ஆட்சி காலத்தில் தான் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு..,

ByP.Thangapandi

Jun 17, 2025

மதுரையில் முகாமிட்டுள்ள உதயநிதி, விளம்பர வெளிச்சத்தில் ஊருக்கு உழைக்கிற உதயநிதி என்று வேசம் போடுகிறார். விளையாட்டுத்துறைக்கு அதிக கவணம் செலுத்தியது அதிமுக ஆட்சி காலத்தில் தான் என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஈச்சம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டும், மீண்டும் முதல்வராக வேண்டி 100 கோவில்களில் வழிபாடு மற்றும் 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பங்கேற்று ஈச்சம்பட்டியில் உள்ள கல்யாண கருப்பசாமி கோவிலில் வழிபாடு நடத்தி அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.,

அதிமுக 52 ஆண்டுகளில் 32 ஆண்டுகளில் ஆளும் கட்சியாக இருந்தது. விளையாட்டு வீரர்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி. சீருடை பணியாளர்கள் பணியில் சேர 10% விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தவர் புரட்சி தலைவி அம்மா.

அதே போன்று கிராம புற பகுதியில் விளையாட்டுத்துறைக்கான கட்டமைப்பு, கிராம ஊராட்சி விளையாட்டு என நான் விளையாட்டுதுறை அமைச்சராக இருந்த போது ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் சென்று ஊக்குவிக்கும் வகையில் அம்மா ஆணையிட்டார்கள்.

அதே போல் முதல்வர் கோப்பையில் குழு வெற்றி பெற்றால் குழுவிற்கு ஒரு லட்சம் என்பதை மாற்றி வெற்றி பெற்ற அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ஒரு லட்சம் என விளையாட்டு துறையில் ஒரு சகாப்ததை படைத்தார்கள்.

இன்று இருக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் மதுரையில் தான் முகாமிட்டுள்ளார். விளம்பர வெளிச்சத்தில் இன்று ஊருக்கு உழைக்கிற உதயநிதி என்று வேசம் போடுகிற நிலை இருக்கிறது. இளைய சமுதாயம் ஆதரிக்க வேண்டியது அதிமுக தான் என பேசினார்.