குற்றச்செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படும் சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில் சிற்பி என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க, மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதன்படி, சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படும் சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில், ‘சிற்பி’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய காவல் துறை நடவடிக்கை எடுத்தது.
இன்று இத்திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் முன்னிலையில் சிற்பிதிட்டத்திற்கான உறுதி மொழியை மாணவர்கள் ஏற்றனர். சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் இருந்து 50 மாணவர்களை கொண்டு இந்த திட்டம் செயல்பட உள்ளது. இந்த மாணவர்களுக்கு கென தனி சீருடையும் வழங்க உள்ளனர்.
சிற்பி திட்டத்தை துவக்கிவைத்த முதல்வர் ஸ்டாலின்
