• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது சரியானது – சீமான்

Byமதி

Oct 11, 2021

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியில் ‘தமிழர் வீரக் கலைப் பாசறை’ என்ற புதிய பிரிவை சீமான் தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வழிபாட்டுத் தலங்களைத் திறந்தபோது மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை. எனவேதான் கொரோனா பரவலை தடுக்க வழிபாட்டுத் தலங்களில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கோயிலும் அங்கேதான் இருக்கும், சாமியும் அங்கேதான் இருப்பார். கொரோனா குறைந்த பின் வழிபாடுகளை நடத்திக் கொள்ளலாமே, திடீரென கொரோனா பரவினால் அரசை குறை சொல்வதற்கா?” என கேள்வி எழுப்பினார்.