கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்தின் அறிவிப்பின்படி இன்று முகாம்களில் தடுப்பூசி போடுபவர்கள் குழுக்கள் முறையில் 22 அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இன்று மாவட்டம் முழுவது 570 முகாம்கள் மூலம் ஒரு லட்சத்தி 35,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வாரம் வரை 4 தடுப்பூசி முகாம்கள் நடத்தபட்டு உள்ளது. நேற்று வரை பல்வேறு மையங்களில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மூலம் மாவட்டம் முழுவதும் இதுவரை 13 லட்சத்து 22 ஆயிரத்து 329 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். அறுபத்தி ஆறு சதவீதத்தைத் தாண்டி தடுப்பூசி போட்டு உள்ளனர். மீதமுள்ள 33 சதவீதம்பேர் தடுப்பூசி போட வேண்டியது உள்ளது. இந்த நிலையில் ஐந்தாவது தடுப்பூசி முகாம் இன்று மாவட்டம் முழுவதும் 570 இடங்களில் நடைபெறுகிறது இன்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன அனைத்து மையங்களிலும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதற்கு பொதுமக்களுக்கு விரிவான ஏற்பாடுகளை சுகாதாரத்துறையினர் செய்துள்ளனர். இதனிடையே மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்றைய முகாம்களில் தடுப்பூசி போடுவார்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு 22 அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்க நாணயம் பரிசு அளிக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து முகாம்களிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.