• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் தான் என் மூச்சை விடவேண்டும் – திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா

Byகாயத்ரி

Sep 23, 2022

யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் (யுஎஸ்ஐபி) ஏற்பாடு செய்த ஒரு உரையாடலில், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மஷாலாவில் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா அவரது இல்லத்தில் இளைஞர் தலைவர்களுடன் இரண்டு நாள் உரையாடல் நடத்தினார்.

அப்போது பேசிய அவர், செயற்கை சீன அதிகாரிகளை விட, சுதந்திரமான மற்றும் திறந்த ஜனநாயகமான இந்தியாவின் உண்மையான, அன்பான மக்களால் சூழப்பட்டு தனது இறுதி மூச்சை விட விரும்புவதாக கூறினார். நான் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சொன்னேன், நான் இன்னும் 15-20 ஆண்டுகள் வாழ்வேன். நான் இறக்கும் நேரத்தில், இந்தியாவில் இறப்பதையே விரும்புகிறேன். அன்பைக் காட்டுபவர்களால் இந்தியா சூழப்பட்டுள்ளது என்று தலாய் லாமா கூறினார். மேலும், திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு Alice and Clifford Spendlove Prize in Social Justice, Diplomacy and Tolerance பரிசு வழங்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.