

அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்கா அருகே உள்ள NH 37 நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற நபரை சிறுத்தைப்புலி தாக்கியுள்ளது. இந்த வீடியோ சமீபத்தில் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.அந்த வீடியோவில், நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஒரு நபர் சைக்கிளில் செல்கிறார், திடீரென்று சிறுத்தை காட்டில் இருந்து குதித்து அவரை தாக்கியதில் அந்த நபர் கீழே விழுந்து விரைவாக திருப்பி செல்வது போன்றவை அதில் பதிவாகியுள்ளது.அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அந்த நபர் நொடி பொழுதில் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். கடவுள் இருக்கான் குமாரு…!!!
