கரூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவருக்கான போட்டி கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 12 உறுப்பினர்களில் அதிமுக சார்பாக 8 பேரும், திமுக சார்பாக 4 பேரும் இருந்துள்ளனர். திமுக எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் அன்று தேர்தல் தள்ளி வைக்கப்ப்பட்டதாக ஒரு கருத்து நிலவியது. இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்தோர் இதற்கான காரணம் கேட்க, போலீசார் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.
இதையடுத்து, அதிமுகவினர் நீதிமன்றத்தை அணுகி உள்ளனர். நீதிபதிகளோ இந்த தேர்தல் நேர்மையாக நடைபெறவேண்டும் என உத்திரவு போட்டதுடன், தேர்தலை வீடியோ பதிவும் செய்ய உத்திரவிட்டனர்.
இந்நிலையில் தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் துண்டுதலின் பேரில் அரசு அதிகாரிகள் அதிமுக உறுப்பினர்களை மிரட்டி உள்ளனர். இதுமட்டுமின்றி பல்வேறு பொய் வழக்குகளையும் போட்டுள்ளனர். இதற்கு பயந்து சிலர் திமுகவில் இணைந்து கொண்டனர். மேலும் பலரை திமுகவில் இணையும்படி மிரட்டப்பட்டும் வருகின்றனர்.
நேர்மையாக இருக்க வேண்டிய அரசு, இப்படி அராஜகம் செய்துவருவதை வன்மையாக கண்டிப்பதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.