மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில், இறந்தவரின் உடலை ஏற்றிக்கொண்டு சுடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்வதற்காக சுமார் 35 பேர் சென்றுகொண்டிருந்த வாகனம் இன்று அதிகாலையில் விபத்தில் சிக்கியது.
சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது அந்த வாகனம் மோதியதில், 18 பேர் பலியாகினர். சிலர் காயமடைந்தனர். விபத்திற்க்கான காரணமாக காவல்துறை தரப்பில், பனிமூட்டம் காரணமாக முன்னால் நின்றிருந்த லாரி தெரியாததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்களை தெரிவித்ததுடன், பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.