புதுக்கோட்டை மாநகரில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அடப்பன்குளம் நிரம்பி உரினி வெளியேற்றப்பட்டு வருகிறது அதை குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது பாதிப்புக்கு உள்ளான பகுதியை அமைச்சர் ரகுபதி எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்
இதன் பின்னர் அடப்பன்குளம் நிரம்பியுள்ளதையும் உபரி நீர் வெளியேற்றப்படுவதையும் அமைச்சர் ரகுபதி பார்வையிட்ட ஆய்வு செய்தார்
இதன்பினர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ரகுபதி

எடப்பாடி பழனிச்சாமிக்கு குற்றம் சுமத்துவது பழக்கம் தான். அதுபோல்தான் நெல்மணிகள் குறித்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகள் பாதுகாப்பாகத்தான் தார்பாய்கள் அமைத்து மூடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு அரசு முழு பொறுப்பேற்றுக் கொள்ளும் என்று உணவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அதனால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
எடப்பாடி பழனிச்சாமி எதை அரசியல் ஆக்கினாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. மக்களும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். அவர் அனைத்தையுமே அரசியல் தான் செய்வார் என்பது நாட்டுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் நன்றாக தெரியும்
தேர்தலுக்கு களத்திற்கு வருகின்றவர்கள் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை கிடையாது எப்போதும் மக்கள் பணியில் பெருமழை பெய்கின்ற பொழுது களத்தில் முதலில் நிற்பவர்கள் திமுகவினர் தான். கடந்த நான்காண்டுகளாக அதை பார்த்து வருகிறார்கள். இரவு பகல் பாராமல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் துணை முதலமைச்சர் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்
வடகிழக்கு பருவமழை எதிர்நோக்கி தான் நாங்கள் காத்திருக்கின்றோம். வடகிழக்கு பருவமழை நல்ல முறையில் பெய்ய வேண்டும்.
விட்டுவிட்டு மழை பெய்ய வேண்டும் அப்போதுதான் தண்ணீர் தேங்கி போதுமான அளவிற்கு இருக்கும். இல்லையென்றால் தண்ணீர் முழுவதும் கடலுக்கு சென்று விடும். கடலுக்கு போகாமல் மக்கள் பாதிக்காத வண்ணம் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு நல்ல முறையில் பபெய்யவேண்டும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இருக்கின்றோம்.
நாங்கள் தூர்வார முறையை முறையாகத்தான் செய்துள்ளோம். புதுக்கோட்டை அடப்பன் குளம் அதிமுக ஆட்சியில் 5 கோடி ரூபாய் மதிப்பில் தூர்வாரப்பட்டதாக சொல்கின்றனர். அதற்கு ஏதாவது அடையாளம் இருக்கிறதா தற்போது. அதற்கான அடையாளமே இல்லை. இப்படி அடையாளமே இல்லாமல் தூர் வாருபவர்கள் நாங்கள் அல்ல உண்மையாக தூர்வார்பவர்கள் நாங்கள்.
திமுக சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மீட்பு பணி முடித்தவற்றை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து தான் துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து வகையிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது.
*எப்போதுமே மத்தியஅரசு நிவாரணம் வழங்குவது வழக்கம் கிடையாது. மத்திய அரசு நிவாரணம் இல்லாமல் எங்களால் முடிந்த அளவு நிச்சயமாக எந்த வகையில் சமாளிக்க முடியுமோ அந்த வகையில் சமாளிப்போம்….என்றார்