• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

புதிய நட்சத்திர கிரகத்தை கண்டுபிடித்தனர்- இஸ்ரோ விஞ்ஞானிகள்

Byமதி

Nov 18, 2021

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவென்றால், ஆமதாபாத்தில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வு கூட விஞ்ஞானிகள், வியாழன் கோளை விட 1.4 மடங்கு பெரிய நட்சத்திர கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த அளவீட்டு பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி கடந்த மார்ச் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விஞ்ஞானி அபிஜித் சக்ரபர்த்தி தலைமையிலான குழுவினர், இந்த நட்சத்திரம் 725 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று நவீன ரேடியல் ஆய்வு கருவி மூலம் இது கண்டுபிடித்துள்ளனர். 1.2 மீட்டர் நீளம் கொண்ட தொலைநோக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டினரும் இருக்கிறார்கள். இந்த புதிய கிரகம் சிறப்பு தன்மைகளை கொண்டுள்ளது.

அதன் தரைதளம் மிக அதிக வெப்பம் கொண்டதாக உள்ளது. பெருந்திரள் நட்சத்திரங்களுக்கு அருகில் இருக்கும் இதுபோன்ற கோள்கள் வெப்பமான வியாழன் கோள்கள் என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற ஆய்வுகள், வியாழன் கோளின் வெப்பத்தன்மை மற்றும் கோள்கள் உருவாவது பற்றி புரிந்துகொள்ள முடிகிறது. இது ஆமதாபாத் ஆய்வு கூடத்தால் 2-வதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.